மதுரை: திருச்சியைச் சேர்ந்த சோழசூரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் செயல்படும் ரயில்வே மற்றும் தபால் துறை பணிகளில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்கள் நியமிக்கப்படுகின்றனர். திருச்சி ரயில்வே பணிமனையில் 1,765 நபர்களுக்கான அப்ரண்டீஸ் பயிற்சிக்கு சுமார் 1,600 பேர் வரை வடமாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தியாவிலுள்ள பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
எனவே, தமிழகத்திலுள்ள ஒன்றிய அரசு மற்றும் அதன் நிறுவனங்களிலுள்ள வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கிடும் வகையில் சட்டம் இயற்றவோ அல்லது அரசாணை பிறப்பிக்குமாறோ அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர், தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச. 1க்கு தள்ளி வைத்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.