கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள எஸ்.டி.எம். மருத்துவக் கல்லூரியில் சுமார் 400 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் முதற்கட்டமாக 84 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மீதமுள்ள மாணவர்களுக்கு பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோல் ஒடிசாவின் சம்பல்பூரில் உள்ள வின்சார் மருத்துவக் கல்லூரியில் 54 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சுந்தர்கரில் உள்ள செயின்ட் வாரிஸ் மேல்நிலைப்பள்ளியில் 42 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். கல்வி நிலையங்கள் கொரோனாவை பரப்பும் மையங்களாக மாறி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.