கும்பகோணம் சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 15, 2021

Comments:0

கும்பகோணம் சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

கும்பகோணம் சிறப்பு நிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

புதிய மாநகராட்சிக்கான வார்டு எல்லை வரையறை செய்யப்பட்டு சாதாரண தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

கும்பகோணம் நகராட்சி - கும்பகோணம் மாநகராட்சியை அமைத்துருவாக்கும் பொருட்டு, கும்பகோணம் நகராட்சியுடன் தாராகரம் பேரூராட்சியை இணைத்தல் -உத்தேச முடிவு - ஆணைகள் -வெளியிடப்படுகிறது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை அரசாணை (நிலை) எண்.85 நாள்: 14.10.2021

ஆணை:

தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2021-22 ஆம் ஆண்டிற்கான இத்துறையின் மானியக் கோரிக்கையின் போது, பிறவற்றுடன் கீழ்க்காணுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது: *2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகர்ப்புர மக்கள் தொகை 48.45 சதவீதம் ஆகும். 20ஆம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புர மக்கள் தொகை சுமார் 53 சதவீதமாக உயர்ந்துள்ளதென கருதப்படுகிறது. எனவே. நகராட்சிகள் கள் மற்றும் தகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புரத் தன்மையோடு உள்ள பகுதிகளை நகர்ப்புரங்கனோடு இணைத்து தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. தற்போது நகராட்சியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியாகவும், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாகவும், அதேபோன்றே மாநகராட்சிகள்.

நகராட்சிகளில் சிலவற்றை விரிவாக்கம் செய்திடவும் தொடர்ந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன. தற்போதுள்ள தகர்ப்பு: உள்ளாட்சிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில், நகர்ப்புரத்தன்மை, மக்கள்தொகை மக்கள் தொகை அடர்த்தி, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும் நகர்ப்புரமாக மாறிவருகின்ற இந்த பகுதிகளிலும் நகரத்திற்கு இணையான அடிப்படை வசதிகளை அளித்திடும் நோக்கிலும்

உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படுகிறது". 2. இதன்படி, "கும்பகோணம் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றி வளர்ச்சி அடைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஒன்றிணைத்து மநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது. 3. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கும்பகோணம் நகராட்சியை மாநகராட்சியாக அமைத்துருவாக்குவது தொடர்பான மேலே முதலாவதாக படிக்கப்பட்ட தமது செயற்குறிப்பில், இவ்வறிவிப்பின் அடிப்படையில் கும்பகோணம் நகராட்சிக்கு அருகில் உள்ள வலையப்பேட்டை ஊராட்சி பகுதியாக-வலையப்பேட்டை குக்கிராமம்- சர்வே எண்கள் 19-21, 37, 38, 86-97, 108-280] அண்ணலக்ரஹாரம் ஊராட்சி [முழுமையாக] பாபுராஜபுரம் ஊராட்சி பகுதியாக பாபுராஜபுரம் குக்கிராமம் - சர்வே எண்கள் 38-46, 57, 60, 72-81,139, 253-289] அசூர் ஊராட்சி பகுதியாக- அகுர் குக்கிராமம்- சர்வே எண்கள் 90-95, 98-102. 112-117. 130-161, 163 மற்றும் 164 இனாம் அசூர் குக்கிராமம் - சர்வே எண்கள் 88, 89, 93 மற்றும் 178), பழவாத்தான்கட்டளை ஊராட்சி (முழுமையாக] கொரநாட்டுக்கருப்பூர் ஊராட்சி kமுழுமையாக), சாக்கோட்டை ஊராட்சி (முழுமையாக), பெருமாண்டி ஊராட்சி முழுமையாக ஊராட்சி முழுமையாக உமாமகேஸ்வரபுரம் ஊராட்சி |பகுதியாக உமாமகேஸ்வரபுரம் குக்கிராமம் - சர்வே எண்கள் 1-94), தேப்பெருமாநல்லூர் ஊராட்சி 1-4, 7-21, 25-34) 1-4. ஏரகரம் ஊராட்ட உள்ளூர் பகுதியாக-கேலூர் குக்கி சர்வே பகுதியாக-மேலக்காவேரி கிராமம்-சர்வே எண்கள் 201-214. 239, 240, 241, 246-250, 253, 254, 268, 269 270 216,2 மற்றும் 0 மற்றும் மூப்பக்கோவில் கிராமம் சர்வே எண்கள் 1-141), மலையப்பறல்லூர் ஊராட்சி பகுதியாக-மலையப்பநல்லூர் கிராமம்-சர்வே எண்கள் 13, 197-199, 319-355 ஆகியவற்றை கும்பகோணம் நகராட்சியுடன் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட 13 ஊராட்சிகளில் அண்ணலக்ரஹாரம், பெருமாண்டி மற்றும் உள்ளூர் ஆகிய 3 ஊராட்சிகள் சென்சஸ் டவுன்கள் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews