நாடு முழுவதும் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் வெளியூர் சென்று வேலை செய்பவர்களின் நலன் கருதி நவ.5ம் தேதி விடுமுறை அளிக்க கோரி ஆசிரியர் கூட்டமைப்பு மனு அனுப்பியுள்ளது.
இந்தியாவில் வரும் நவ.4 ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஏற்கனவே மக்கள் கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக தீபாவளி பண்டிகை கொண்டாடவில்லை. அதனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கோலாகலமாக கொண்டாட மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். தமிழக அரசு தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்துள்ளது. எனினும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர் சென்று வேலை பார்க்கும் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்களது சொந்த ஊருக்கு வருகின்றனர். அவ்வாறு வேறு ஊரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பும் மக்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகளை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் இம்முறை தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் வருவதற்கு மட்டுமே, திரும்பி அவர்கள் வேலைக்கு செல்லும் போது இதை விட அதிக பேருந்துகள் தேவைப்படும் அதனால் தீபாவளி முடிந்த பின்னர் 17 ஆயிரத்திற்கும் மேலான பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார். அவ்வாறு சொந்த ஊருக்கு செல்பவர்கள் தீபாவளி முடிந்து ஒரே நாளில் அதாவது நவ.5ம் தேதி வேலைக்கு செல்வது என்பது முடியாத காரியம். அதனால் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் அவர்கள் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தீபாவளி பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் நவ.5ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களது கோரிக்கையை தமிழக முதலமைச்சர் ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.