லக்னோ-மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுதியதில் நடந்த மோசடியில் 25 மாணவர்களுக்கு தொடர்பு உள்ளதாக, உத்தர பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
நீட் நுழைவுத் தேர்வு செப்., 12ல் நாடு முழுதும் நடந்தது. உத்தர பிரதேசத்தில் ஒரு தேர்வு மையத்தில் மாணவர் ஒருவர் வரவில்லை. அந்த மாணவருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து மோசடி நபர் ஒருவர் தேர்வு எழுதவிருந்தது தெரியவந்தது. மாணவர்களிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பெற்று, மருத்துவம் படிக்கும் மாணவர்கள் மற்றும் நிபுணர்களை தேர்வு எழுத வைக்கும் மோசடி அம்பலமானது.சி.பி.ஐ., விசாரணையில், மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஒரு பயிற்சி மையம் இந்த மோசடியை செய்தது தெரிந்தது.
இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு, உத்தர பிரதேச போலீசார் அறிக்கை ஒன்றை அனுப்பிஉள்ளனர். உ.பி.,யில் மட்டும் 25 மாணவர்கள் இவ்வாறு ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.