அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம் - வேலை வாய்ப்பு அறிவிப்பு - கடைசி தேதி: 22.11.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 19, 2021

Comments:0

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம் - வேலை வாய்ப்பு அறிவிப்பு - கடைசி தேதி: 22.11.2021

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் (ம) வட்டம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பதவிகளில் நியமனம் செய்வதற்காக கீழ்க்கண்ட விவரப்படியான பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 22.11.2021 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதர விபரங்களை அலுவலகத்தில், அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் நேரில் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மற்றும் திருக்கோயில் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
நிபந்தனைகள்

இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.

2) தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள், நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசுப்பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், ஆகியோர் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

3) நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

4) இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும், 22.11.2021-ம் தேதி மாலை 5.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

5) விண்ணப்பதாரர்கள், ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விவங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

6) விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

7) வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். 8) நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை. 9) விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.

10) விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை அனுப்பகூடாது.

11) ராஜீகத்தாலும், தெய்வீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

12) விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை நேரிலோ அல்லது https://www.tnhrce.gov.in என்கிற இணையதள முகவரியில் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் பெயரில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

13) விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி உதவி ஆணையர் / செயல் அலுவலர்,

அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர் (ம) வட்டம், விழுப்புரம் மாவட்டம் - 604 204

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews