Breaking

Friday, October 08, 2021

தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு உத்தரவு - அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய பள்ளி கல்வித்துறைக்கு அறிவுரை

தமிழ கத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட் டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளை யும் பள்ளி கல்வித்துறை மேற்கொள்ள அறிவுறுத் தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளி யிட்டுள்ள அரசாணை யில் கூறி இருப்பதாவது;

தமிழகத்தில் கடந்த 5ம் தேதி காலை 4 மணி யில் இருந்து வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக் கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் சீராய்வு கூட்டம் நடத்தினார்.

அதில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், அண்டை மாநிலங்களில் கொரோனா பரவல், விரைவில் வரவுள்ள பண்டிகை காலத்தை யொட்டி பொதுமக்கள் அதிக அளவில் கூடா மல் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்கள்குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் ஏற்கனவே அமலில் இருக் கும் கட்டுப்பாடுகளுடன் சிலதளர்வுகளும் அறிவிக் கப்பட்டுள்ளது. அதாவது, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின் பற்றி அனைத்து திங்கட் கிழமைகளிலும்மாவட்ட ஆட்சியர் அலுவலகங்க ளில் பொதுமக்கள் குறை தீர்கூட்டம் நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின் பற்றி மாவட்ட ஆட்சியர்அலுவலகங்களில் மாதந் தோறும் விவசாயிகளின் குறைதீர் கூட்டம் நடத் தப்படும். மருத்துவ நிபு ணர்களின் பரிந்துரைக ளின் அடிப்படையில் 9 முதல் 12ம் வகுப்பு வரை யிலான மாணவர்களுக்கு ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இதேபோல் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள் ளிகள் திறப்பது குறித்து வல்லுநர்கள், கல்வியா ளர்கள், பெற்றோர்கள். உள்ளிட்டோரிடம் ஆலோசிக்கப்பட்டது. அதில், தொடர்ந்து பள் ளிகள் மூடப்பட்டிருப்ப தால் கற்றல் இடைவெளி ஏற்பட்டிருப்பதாக கருத் துக்கள் தெரிவிக்கப்பட் டது.

இதனை தவிர்க்கும் வகையில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளி கள் திறக்க அனுமதிக் கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளை யும் பள்ளி கல்வித்துறை மேற்கொள்ள அறிவுறுத் தப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசு உத்தர வில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog