புதுச்சேரி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு குறித்த எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
காலாண்டு தேர்வு:
புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்றது. புதுச்சேரி அரசு நோய் பரவலை தடுக்க பல்வேறு பணிகளை மேற்கொண்டு தொற்று பரவலை குறைத்துள்ளது. மற்ற மாநிலங்களில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியலும் பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் பிறகு தமிழகத்தை போலவே செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 1 ஆம் தேதி முதல் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகள் மதியும் 1 மணி வரை நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் புதுச்சேரி தனியார் பள்ளிகளில் இம்மாதம் இறுதிக்குள் காலாண்டு தேர்வினை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 15 முதல் தொடங்கும் என்ற கால அட்டவணை மாணவர்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பபட்டு வருகிறது. மேலும் மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்வை எழுதி பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடர்பான அட்டவணை எதுவும் வெளியிடப்பட்டவில்லை. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.