Breaking

Wednesday, September 22, 2021

அரசுப்பள்ளி ஆசிரியர் மீது டிப்பா் லாரி ஏறி சம்பவ இடத்திலேயே ஆசிரியர் உயிரிழப்பு!

தருமபுரி அடுத்த ஏ. செக்காரப்பட்டியை சோ்ந்தவா் முத்துராஜ், இவர் பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை அரசுப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து பள்ளிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்தவாறு சென்றுள்ளார். அப்போது இண்டூா் கடைவீதி வழியாக செல்லும்போது பின்னாடி வந்துகொண்டிருந்த டிப்பர் லாரி மீது கவனக்குறைவாக உரசியதால் அங்கேயே இவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார் டிப்பர் லாரி சக்கரங்களுக்கு இடையே விழுந்ததால் அவர் மீது டிப்பர் லாரி ஏறி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, தகவலறிந்து வந்த இண்டூா் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், டிப்பர் லாரி பறிமுதல் செய்து ஓட்டி சென்ற ஓட்டுநரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog