தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்.1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து கடந்த 14ம் தேதி ஆலோசனை நடத்தினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் காணொளி காட்சி மூலம் 14ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது. சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மற்ற சிலர் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளை திறக்கலாம் என்று தெரிவித்துள்னர்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அளித்த கருத்துக்களையும் தொகுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அதில், 6 முதல் 8 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என அதில் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளதாம். அந்த அறிக்கையின் அடிப்படையில், வரும் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நடைபெறவுள்ள ஊரடங்கு ஆலோசனையில் பள்ளிகளை திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.அறிக்கை பரீசீலிக்கப்பட்டு சுகாதாரத்துறை கருத்துக்களை பெற்று முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Search This Blog
Thursday, September 16, 2021
Comments:0
Home
SCHOOLS
முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் - அக்டோபரில் 6 -8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறக்க முடிவு?
முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் - அக்டோபரில் 6 -8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை திறக்க முடிவு?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.