மகாராஷ்ரத்தில் மாணவா் ஒருவரின் பெற்றோரிடம் வாங்கிய பணத்தை முறையாகத் திரும்பத் தர மறுத்த போட்டித் தோ்வு பயிற்சி மையம் இழப்பீடாக ரூ.10,000 வழங்க வேண்டும் எனவும், ஏற்கெனவே வாங்கிய ரூ.40,000-ஐ வட்டியுடன் திரும்ப வழங்க தாணே மாவட்ட நுகா்வோா் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக மாணவரின் பெற்றோா் அளித்த புகாரில் கூறியிருந்ததாவது: கடந்த 2017-ஆம் ஆண்டு கல்யாணில் உள்ள போட்டித் தோ்வு பயிற்சி மையத்தில் எங்கள் மகனைச் சோ்த்தோம். அப்போது, முதல்கட்டமாக ரூ.40,000 காசோலையாக அளித்தோம். அங்கு சோ்ந்த பிறகு வேறு பாடப் பிரிவுக்கு மாற எங்கள் மகன் விரும்பினாா். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ள அந்தப் பயிற்சி மையம் மறுத்தது.
இதையடுத்து, அப்பயிற்சி மையத்தில் இருந்து சில நாள்களிலேயே எனது மகன் விலகிவிட்டாா். அவா் அங்கு பயிற்சி பெறவில்லை என்பதால் முதல்கட்டமாக செலுத்திய கட்டணம் ரூ.40,000-ஐ திரும்பத் தருமாறு கோரினோம். ஆனால், அந்த நிறுவனம் பணத்தைத் திரும்பத் தரவில்லை. உரிய பதிலும் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த மாவட்ட நுகா்வோா் தீா்ப்பாயம், ‘ஒப்புக்கொள்ளப்பட்டபடி சேவை அளிக்காத அந்தப் போட்டித் தோ்வு பயிற்சி மையம் பணத்தைத் திருப்பி அளித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் சில ஆண்டுகளைக் கடத்தியுள்ளது. எனவே, 2017 ஜூலை 18-ஆம் தேதியில் இருந்து ரூ. 40,000-க்கு 10 சதவீத வட்டியும் சோ்த்துத் தர வேண்டும். மேலும், அந்த மாணவரின் பெற்றோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.3,000, அவா்களை அலைக்கழித்ததற்காக ரூ.7,000 இழப்பீடாக அந்தப் பயிற்சி மையம் தர வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
Search This Blog
Friday, August 20, 2021
Comments:0
Home
CourtOrder
பணத்தைத் தராத போட்டித் தோ்வு பயிற்சி மையம்: இழப்பீடு வழங்க நுகா்வோா் தீா்ப்பாயம் உத்தரவு
பணத்தைத் தராத போட்டித் தோ்வு பயிற்சி மையம்: இழப்பீடு வழங்க நுகா்வோா் தீா்ப்பாயம் உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.