தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் மே – 2021 துறைத் தேர்வுகள் ஆகஸ்டு மாதம் 16 ஆம் தேதியிலிருந்து நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு சில திருத்தங்களுடன் மீள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
TNPSC அறிவிப்பு:
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றிற்கு TNPSC சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 16ம் தேதி துறைத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்காக ஏற்கனவே நுழைவுச் சீட்டுகள் வெளியிடப்பட்டன. இதனை பல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆனால் இரு வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பித்து உள்ள தேர்வர்களுக்கு நீண்ட இடைவெளியில் உள்ள தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் ஒரே நாளில் முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறும் வெவ்வேறு வகையிலான இரண்டு தேர்வுகளையும் ஒரே தேர்வு மையத்தில் எழுதும் வகையில் (அதாவது முற்பகல் மற்றும் பிற்பகல்) மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டு தற்போது சில திருத்தங்களுடன் மீள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே மாற்றியமைக்கப்பட்ட நுழைவுச் சீட்டினை அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகளில் தேர்வர்கள் அவர்களுடைய துறைத் தேர்வுகளுக்கான ஒரு முறைப் பதிவின் வழியாக தங்களுடைய விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடூ செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுக்கூடங்களில் தேர்வு எழுத செல்லுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், மாற்றியமைக்கப்பட்ட நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர் என TNPSC தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா மஹேஸ்வரி அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
TNPSC Press Release 43 / 2021
TNPSC Press Release 44 / 2021

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.