தனியார் பள்ளி இலவச சேர்க்கை விண்ணப்பிக்க நாளை கடைசி
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு நாளையுடன் (ஆகஸ்ட் 3) நிறைவு பெறுகிறது.
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம். அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 8,446 தனியார் பள்ளிகளில் சுமார் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுவரை 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் (ஆகஸ்ட் 3) நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.
சேர்க்கை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் பள்ளிக்கல்வியின் இலவச உதவி மைய எண்ணை (14417) தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.