கூடுதல் கல்வித்தகுதி கொண்ட ஆசிரியர்களுக்கு, வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை திட்டத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.பள்ளிக்கல்வித்துறையில், இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, அடிப்படை கல்வித்தகுதி வரையறுக்கப்பட்டுள்ளது. இதைவிட கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருந்தால், அதிகபட்சம் இரு முறை வரை, ஊக்கத்தொகை பெறலாம்.கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், இந்நடைமுறை பின்பற்றப்பட்டது.கடந்த இரு ஆண்டுகளாக, ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகை வழங்காமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் பக்தவத்சலம் கூறுகையில், ''அரசுப்பள்ளிகளில் கடந்த இரு ஆண்டுகளாக, மாணவர் சேர்க்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கற்பித்தலை வலுப்படுத்த, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை, மேல்நிலை வகுப்புகளில் இருப்பது போல, பாடவாரியாக பிரத்யேக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.பல பள்ளிகளில், ஒரே ஆசிரியரே அதிகபட்சம் மூன்று பாடங்கள் வரை கையாள்கிறார். ''ஆசிரியர்கள் கல்வித்தகுதியை உயர்த்தி கொள்ளும் போது வழங்கப்பட்டு வந்த, ஊக்கத்தொகை நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்,'' என்றார்.
Search This Blog
Saturday, August 28, 2021
Comments:0
கூடுதல் கல்வித்தகுதிக்கு ஊக்கத்தொகை - மீண்டும் வழங்க ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.