"எம்.எல். சட்டப் படிப்புகளை நடத்த சென்னை பல்கலைக்கழகத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு செவ்வாய்க்கிழமை (ஆக.31) உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன். இவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு: பல்கலைக்கழக மானியக் குழு, பாா் கவுன்சில் உத்தரவுகளுக்கு முரணாக சென்னை பல்கலைக்கழகம், சட்டக் கல்வி தொடா்பான படிப்புகளை நடத்தி வருகிறது. இதனால் மாணவா்களின் பணம் மட்டும் அல்ல காலமும் வீணாகுகிறது.
எனவே, எம்.எல். சட்ட படிப்புகளை நடத்த சென்னை பல்கலைக்கழகத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
2020-21-ஆம் கல்வியாண்டில் சோ்க்கப்பட்ட மாணவா்களிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி தலைமையிலான அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது."

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.