அரசூழியர்,ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு சென்ற மாதம்(ஜூலை 21) வழங்கிய 11% அகவிலைப்படி உயர்வு(DA) தமிழக அரசின் மாத ஊதியம் பெறுபவர்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு பிறகு அடுத்த ஆண்டு ஏப்ரல்(01-4-22) முதல் வழங்கப்படும்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதரர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் வழங்கப்படும் என பட்ஜெட் அறிக்கையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அறிவித்து உள்ளார்.
தமிழக அரசு பட்ஜெட்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையில், முதற்முறையாக 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 13) தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சென்னையில் கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பல மாதங்களாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்பாக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதரர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா காரணமாக அகவிலைப்படி உயர்த்தாமல் இருந்த காரணத்தால், தற்போது உயர்த்தப்பட்ட அகவிலைப்படி (28 சதவீதம்) வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து பல மாநில அரசுகள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து, தற்போது தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.