வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 02, 2021

Comments:0

வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காத மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி அதை செயல்படுத்தியும் வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமையும் அளித்து வருகிறது. இந்த திட்டம் மாற்றுத்திறனாளிகள் கல்வி பெற ஊக்கமளிக்கிறது. மேலும் கல்வி பயிலும் போது அரசு சார்பாக மாதந்தோறும் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் தனி அடையாளத்தை பெறும் வகையில் அரசு தொடர்ந்தது தனது ஆதரவையும் அளித்து வருகிறது. இதனை தொடர்ந்து வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு ஊக்கத்தொகைகளை அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்ட அரசு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காமல் உள்ள மாற்றுதிறனாளிகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் 10ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 600 மற்றும் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் 750 ரூபாயும் கல்லூரி இளநிலை, முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகையாக மாதந்தோறும் 10 ஆண்டுகள் வரை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். வேலைவாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் என்ற பிரிவில் பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் தற்போது கல்வி நிலையங்களில் கல்வி கற்கும் மாணவர்களாக இருக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கி இருக்க வேண்டும் எவ்வித வயது உச்ச வரம்பும் இல்லை. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து ஆவணங்களை இணைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews