புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாளாக ஆகஸ்ட் 14 அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்களின் வேண்டுதலுக்கு இணங்க ஆகஸ்ட் 20 வரை விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நுழைவு தேர்வு:
இந்திய அரசின் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.டெக்., பி.எச்.டி., படிப்புகளை தொடர்ந்து பல்வேறு டிப்ளோமா படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில் புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்கு நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. நடப்பாண்டிற்கான (2021 – 2022) நுழைவுத் தேர்வு செப்டம்பர் 2, 3, மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 38 நகரங்களில் நடைபெறும் இந்த நுழைவு தேர்வானது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. புதுச்சேரி பல்கலைக்கழக இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க ஜூலை மாதம் 19 ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாணவர்களின் வேண்டுதலுக்கு இணங்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இறுதி தேதி ஆகஸ்ட் 20 என நீடித்து புதுச்சேரி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
நுழைவு தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் நுழைவு தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். பி.ஜி., முதுநிலை படிப்பிற்கு எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவினர் 300 ரூபாய், பிற பிரிவினர் 600 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பி.எச்.டி., எம்.பி.ஏ., படிப்புகளில் எஸ்.சி., பிரிவினருக்கு 500 ரூபாய், பிற பிரிவினர் 1,000 ரூபாய் நுழைவு தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் நுழைவு தேர்வு கட்டணம் செலுத்த தேவை இல்லை எனவும் கூறப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு www.pondiuni.edu.in எனும் இணைய முகவரியை அணுகவும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.