இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங் - படிப்பும், வேலைவாய்ப்பும்... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 03, 2021

Comments:0

இன்ஸ்ட்ருமெண்டேஷன் இன்ஜினியரிங் - படிப்பும், வேலைவாய்ப்பும்...

கருவிப் பொறியாளரின் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினிய (ரிற்) வேலையானது இயந்திரங்களைக் கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்தப் பயன்படும் உபகரணங்களை வடிவமைத்தல், உருவாக்குதல், நிறுவுதல், நிர்வகித்தல் போன்றவையாகும்.

1970 களின் முற்பகுதியில் இந்த பாடநெறி எம்.எஸ்ஸி டெக் இன்ஸ்ட்ருமென்டேஷன் என அழைக்கப்பட்டது. ஆனால் இன்று இது பல்வேறு கல்லூரிகளிலும் வேறு வேறு பெயர்க னால் அழைக்கப்படுகின்றது. சிலர் இந்த பி.டெக் எலக்ட்ரா னிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் என்றும் மற்றும் சிலர் பி.டெக் சுன்ட்ரோல் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் என்றும் அழைக்கிறார்கள்.

பொறியியல் துறைகளில் ஒன்றான இது வடிவமைப்பு, மின்சார நியூமேடிக் களங்களில் தானியங்கி அமைப்புகளின் உள்ளமைவு போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் அளவீட் டுக் கருவிகளின் கொள்கை மற்றும் செயல்பாட்டில் நிபுணத் துவம் உடையதாகும்.

கல்வித்தகுதி:- பனிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதி யியல் மற்றும் கணிதப்பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும். நான்கு வருட காலப் பொறியியல் படிப்பான பி.இ / பி.டெக் படிப்பில் சேருவதற்கு மாநில, தேசிய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியது அவசிய மாகும். இத்துறை இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர் கள் இத்துறையிலேயே முதுகலை பட்டப்படிப்பான எம்.இ எம்.டெக் படிப்பில் இணைந்து படிக்கலாம். எம்.இ / எம்.டெக் முடித்தவர்கள் முனைவர் பட்டப்படிப்பில் இணைந்து படிக்க லாம்.

சிறந்த கல்லூரிகள்:

இந்திய தொழிற்கல்வி நிறுவனம், காக்பூர் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை தேசிய தொழிற்கல்வி நிறுவனம், திருச்சி கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் புதுதில்லியிலும் சிறந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இத்துறை பொறியி யல் படிப்பை மிகவும் சிறப்பாக வழங்குகின்றன.


வாய்ப்பு:- இன்ஸ்ட்ருமென்டேஷன் பொறியாளர்கள் முறுக்கை அளவிடும் டைனமோ மீட்டர்ஸ், இரத்த குளுக்கோஸ் மானிட் டர்கள், விமான சென்சார்கள் மற்றும் புகையைக் கண்டறியும் சாதனங்களை வடிவமைக்கலாம். மேலும் எலக்ட்ரோகார்டியோ கிராஃப் உபகரணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் டோமோகிராபி ஸ்கேனர்களை உருவாக்கலாம் அல்லது பாதுகாப்பு அமைப்பு| களில் வேலை செய்யலாம்.
ஒவ்வொரு வெற்றிகரமான ஆராய்ச்சி திட்டங்களிலும் இத்துறை பொறியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார் கள். மேலும் உற்பத்தி நிறுவ னங்கள், பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனங்கள். பயோ மெடிக்கல் நிறுவனங்கள் மற்றும் அரசு அல்லது தனியார் பொறியி யல் நிறுவனங்களிலும் வேலை செய்யும் வாய்ப்பைப் பெறுகிறார் கள்.

பொது/தனியார் நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை நிறுவனங்கள், எஃகு ஆலைகள், சிமெண்ட் உற் பத்தித் தொழிற்சாலைகள், துறை நிறுவனங்களில் அதிக நிறுவனங்களில் மட்டுமல்லாது அன்றாட நடவடிக்கைகளுக்கு வெப்ப மின் நிலையங்கள் (தெர்மல் பவர் பிளான்ட்ஸ்) மற்றும் இதேபோன்ற தொழில் அளவில் வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள். மேற்கண்ட இத்துறைப் பொறியாளர்கள் சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தும் நிறுவனங்களிலும் தங்கள் சேவையை வழங்குகிறார்கள். தேவையான தகுதிகள்:

கணிதம் மற்றும் இயற்பியலில் அறிவும், வலுவான பிடிப்பும் இருக்க வேண்டும். தனித்துவமான, சவாலான சிக் கல்களைத் தீர்ப்பதற்கான சூழ்நிலைகளில் இருப்பதால் இத் துறைப் பொறியாளர்கள் பின்வரும் திறன்களைக் கொண்டி ருக்க வேண்டும்.

திட்டத் தேவைகளை மொழி பெயர்க்கும் வலுவான தகவல் தொடர்பு திறன்.

பணிச்சிக்கலைத் தீர்க்கும் திறன்

இத்திறன்கள் வன்பொருளின் வடிவமைப்பு மேம்பாட்டுக்கு ஏற்றது.

ஊதியம்:- இத்துறையில் புதுவரவாக நுழையும் பொறியாளர் களுக்கு வருட வருமானம் நான்கு லட்சத்திலிருந்து துவங்கு கின்றது. அனுபவம், திறமை மற்றும் ஆழ்ந்த அறிவு இயற்கை யாகவே இந்த வேலைக்கான ஊதியத்தை அதிகரிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.

அரசு நிறுவனங்களைப் போலவே தனியார் நிறுவனங்களும் கௌரவமான ஊதியத்தை வழங்குவதோடு சிறந்த சலுகை களையும் வழங்குகின்றன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews