பள்ளிகளை திறப்பது பற்றி முதல்-அமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் பரவலால் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் செப்டம்பர் 1-ந் தேதி அன்று 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் தமிழக அரசு கருத்துக்களை கேட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, பள்ளிகளை திறப்பது பற்றி முதல்-அமைச்சருடனான ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்றார்.
பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் குறைந்த அளவிலேயே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Search This Blog
Sunday, August 08, 2021
1
Comments
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது பற்றி மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
Subscribe to:
Post Comments (Atom)
Supper
ReplyDelete