பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? இன்று மாலை வருகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பள்ளி, கல்லூரிகள் திறக்கலாமா அல்லது தேதியை ஒத்திவைக்கலாமா என முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 1ஆம் முதல் திறக்கப்பட உள்ளன. பள்ளிகளில் 9,10,11,12ஆம் ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது தொடர்பாக சுகாதாரத்துறை, காவல் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், பள்ளி, கல்லூரிகள் திறக்கலாமா அல்லது தேதியை ஒத்திவைக்கலாமா என முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், தேதியை ஒத்திவைக்கலாமா என ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.