அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை தாமதமாகி உள்ளதால், மாணவர்களும், பெற்றோரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.தமிழகத்தில் உயர் கல்வித் துறையின் கீழ் செயல்படும், 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக கல்லுாரி கல்வித் துறை சார்பில், இந்த மாதம், 10ம் தேதி வரை, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்பட்டது.
கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவித்த இணையதளத்தில், மாணவர்கள், தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். இதையடுத்து, ஒவ்வொரு கல்லுாரியும் விண்ணப்பங்களை பரிசீலித்து, தங்களின் இணையதளம் வழியே, தரவரிசை பட்டியலை வெளியிடும். அதிலுள்ள வரிசைப்படி, மாணவர் சேர்க்கை நடக்கும் என, அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், 10ம் தேதி விண்ணப்ப பதிவு முடிந்து, ஒரு வாரம் தாண்டிய பின்னும், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கவில்லை.விண்ணப்ப பதிவு செய்த அனைவருக்கும், தரவரிசை பட்டியல் தயாரித்து, கல்லுாரி இணையதளங்களில் வெளியிடவில்லை.மேலும், கல்லுாரியில் இருந்து எந்த தகவலும் அனுப்பவில்லை என்றும், மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கல்லுாரிகளுக்கு சென்றால், மாணவர்கள் அனுமதிக்கப்படாத நிலை உள்ளது.இதுகுறித்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மவுனமாக உள்ளது. அதனால், மாணவர்கள் தங்களது விண்ணப்பங்கள் என்ன ஆகின; 'சீட்' கிடைக்குமா என, அச்சம் அடைந்துள்ளனர். எனவே, கல்லுாரி கல்வி இயக்குனரும், மற்ற அதிகாரிகளும் தங்களின் பொறுப்பை உணர்ந்து, மாணவர் சேர்க்கை பணிகளை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.