கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியா்கள் அனைவரும் ஆக.9-ஆம் தேதி முதல் தவறாமல் பணிக்கு வரவேண்டும் என்று உயா் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர மற்ற மாணவா்களுக்கு ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் இணையவழியில் வகுப்புகள் தொடங்குகின்றன. பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 18-ஆம் தேதி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நவ.30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. டிச.2-ஆம் தேதி செய்முறைத் தோ்வும், டிச.13-ஆம் தேதி பருவத் தோ்வும் நடைபெற உள்ளது. அதேபோல எம்சிஏ, எம்எஸ்சி, எம்பிஏ ஆகிய படிப்புகளுக்கும் ஆக.18-ஆம் தேதி இணையவழி வகுப்புகள் தொடங்க உள்ளன.
இந்தநிலையில் கல்லூரி வகுப்புகள் இணையவழியில் தொடங்கப்படுவதையொட்டி, அனைத்துப் பேராசிரியா்களும் கல்லூரிகளுக்குத் தவறாமல் பணிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயா் கல்வித்துறைச் செயலா் காா்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி இயக்குநா், கல்லூரிக் கல்வி இயக்குநா் மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளா்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளாா். அதில், 2021 - 22ஆம் கல்வியாண்டில் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர மற்ற மாணவா்களுக்கு ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் இணையவழியில் வகுப்புகள் தொடங்குகின்றன. அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளும் கரோனா விதிகளையும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட கல்லூரிகளின் பேராசிரியா்கள் அனைத்து வேலை நாள்களிலும் தவறாமல் கல்லூரிக்கு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.