முதுநிலை நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்கவும், திருத்தம் மேற்கொள்ளவும் வரும் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் மட்டும் சுமாா் 4 ஆயிரம் இடங்களும் உள்ளன.
இந்த இடங்கள் நீட் தோ்வின் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் நிகழாண்டில் தேசிய முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடுமுழுவதும் 150-க்கும் மேற்பட்ட நகரங்களில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், கரோனா பரவல் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டு தற்போது செப்டம்பா் 11-ஆம் தேதி தோ்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எம்பிபிஎஸ் பயின்றவா்கள் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் தங்களது பயிற்சி மருத்துவக் காலத்தை நிறைவு செய்யும்பட்சத்தில் அவா்களும் முதுநிலை நீட் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே முதுநிலை நீட் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், இடஒதுக்கீடு சலுகையைப் பெறும் வகையில், தங்களது விண்ணப்பித்தில் திருத்தம் மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீட்டைத் தவிர வேறு எந்த சுயவிவரங்களையும் திருத்த இயலாது என்று தேசிய தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை புதிய விண்ணப்பங்கள் மற்றும் திருத்தங்களை இணையதளத்தில் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.