தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அனைத்து பேராசிரியர்களும் கட்டாயம் கல்லூரிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி வளாகங்கள் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கல்லூரிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தவிர மற்ற ஆண்டு வகுப்புகள் ஆன்லைன் மூலமாக வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
அதுமட்டுமில்லாமல் பொறியியல் கல்லூரி ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. மேலும் டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் கட்டாயம் கல்லூரிக்கு வர வேண்டும் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் கொரோனா விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள் கட்டாயம் ஆகஸ்ட் 9 முதல் கல்லூரிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பல மாதங்களாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது கல்லூரிகளை திறந்து சுத்தப்படுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. பேராசிரியர்கள் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாகவும், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதை பின்பற்றி பேராசிரியர்கள் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில பேராசிரியர்கள் கொரோனா அச்சம் காரணமாக கல்லூரிக்கு வர தயக்கம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஆன்லைன் வகுப்புகளில் எந்தவித தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக கட்டாயம் கல்லூரிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.