Breaking

Saturday, August 07, 2021

பள்ளி மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (TC) வழங்கல் – உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தாததை காரணம் கூறி மாற்றுச் சான்றிதழ் தர மறுப்பு தெரிவிக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாற்று சான்றிதழ் தர மறுக்கும் பள்ளிகள் மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாற்றுச் சான்றிதழ்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் & கல்வி தொலைக்காட்சி மூலமும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கியதை அடுத்து அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த வருடத்தை விட நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் தங்களின் வேலைகளை இழந்துள்ளதால் தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களால் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தனியார் பள்ளிகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கல்வி கட்டணம் செலுத்தாமல் உள்ள மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழை பள்ளிகள் தர மறுப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை பிற பள்ளிகளில் சேர்க்க அனுமதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்தாததை காரணம் கூறி மாற்றுச் சான்றிதழ் தர மறுப்பு தெரிவிக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாற்றுச் சான்றிதழ் தர மறுக்கும் பள்ளிகள் மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog