உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாட்டுக்கு 69% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: திமுக
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசுக்கு வழங்கிய பின் தமிழக இடஒதுக்கீடு எப்படி பொருந்தும் என்று ஒன்றிய அரசு கேள்வி எழுப்பியுள்ளது. ஓபிசி பிரிவினருக்கு மாநில அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என கோருவது ஏன்? என்று ஒன்றிய அரசு வினவியுள்ளது. இடங்கள் நிரப்பப்பட்டு மீண்டும் மாநில அரசுக்கு திரும்ப வழங்கினால் மட்டுமே இடஒதுக்கீட்டை பின்பற்ற முடியும். திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளது என்றும், எனவே அந்த உத்தரவை தான் அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து வழக்கு விசாரணை வருகின்ற திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.