Breaking

Monday, August 16, 2021

‘நெட்’ தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் - அக்டோபர் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை தேர்வு நடக்கிறது

கல்லூரி உதவி பேராசிரியர்கள் பணிக்கான பல்கலைக்கழக மானியக்குழுவின் தேசிய தகுதி தேர்வு (நெட்' தேர்வு) ஒவ் வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத் தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட இருந்த தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் நோய்த்தொற்றின் தாக்கம் குறையாததால்மேமாதம் நடத்தப் படுவதாக அறிவிக்கப்பட்ட தேர்வும் தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் கடந்த ஜூன் மாதத்துக்கான 'யு.ஜி.சி. நெட்' தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற இருப்பதாக 'நெட்' தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அறிவித்து இருக்கிறது. அதன்படி, இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி கடைசி நாள் ஆகும். கணினி அடிப்ப டையிலான தேர்வாக ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணிவரையில் முதல் ஷிப்டு, பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை 2-வது ஷிப்டு அடிப்படை யிலும் தேர்வு நடக்க இருக்கிறது. இதுதொடர்பான தகவல்க ளுக்கு ugcnet.nta.nic.in, www.nta.ac.inஎன்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog