தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் தற்போது உள்ள இடங்களில் கூடுதலாக 25 சதவீதம் அதிகரித்து கொள்ளலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தகவல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கூடுவதை தவிர்க்க ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. www.tngasa.in, www.tndceonline.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த இணையதளத்தில் 150 கலை, அறிவியல் கல்லூரிகளின் விவரங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவர்களுக்கு சேர்க்கை மையங்கள் அமைக்கப்பட்டு சேர்க்கை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தாண்டு அனைத்து மாணவர்களும் 12ம் வகுப்பில் ஆல் பாஸ் பெற்றுள்ளதால் கல்லூரிகளில் சேர மாணவர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஒதுக்குவது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அரசு கல்லூரிகளில் தற்போது உள்ள இடங்களில் கூடுதலாக 25 சதவீதம் அதிகரித்துக் கொள்ளலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.