பிளஸ் 2 முடித்தவர்கள் ஆன்லைன் டேட்டாசயின்ஸ் டிப்ளமோ படிப்பில் சேரலாம் என்று சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.
சென்னை ஐஐடி, புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் என்ற ஆன்லைன்டிப்ளமோ படிப்பை 2020-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. 10-ம் வகுப்பில் கணிதம்,ஆங்கிலம் பாடங்கள் படித்து பிளஸ் 2 முடித்த எவரும் இப்படிப்பில் சேரலாம்.
அதன்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் பணிகளில் இருப்பவர்கள், பொறியாளர்கள், மேலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த ஆன்லைன் படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த பேட்சு-க்கானமாணவர் சேர்க்கை குறித்து ஐஐடி அறிவித்துள்ளது. கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களும் இந்த ஆன்லைன் படிப்பில் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சேர விரும்புவோர் https://onlinedegree.iitm.ac.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகள் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது.
புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்புவோருக்கு இந்த ஆன்லைன் டிப்ளமோ படிப்பு பெரிதும் உதவும் என்று ஐஐடி டேட்டா சயின்ஸ் படிப்பு திட்ட இயக்குநர் பேராசிரியர் ஆன்ட்ரு தங்கராஜ் தெரிவித் துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.