தெலங்கானாவில் நாளை(செப்.1) பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்ற மாநில அரசின் அறிவிப்புக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.
கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது கரோனா குறைந்து வருவதையடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. கரோனா பாதிப்பு குறைந்தபோதிலும், மூன்றாம் அலை பரவலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பல்வேறு தரப்பினர் கல்வி நிலையங்கள் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பை எதிர்த்து தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் அம்மாநில அரசின் அறிவிப்பிற்கு தடை விதித்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.