அண்ணா பல்கலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆகஸ்ட் 18 கடைசி நாள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 06, 2021

Comments:0

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆகஸ்ட் 18 கடைசி நாள்!

அண்ணா பல்கலைகழகத்தில் தொலைதூரக்கல்வி மூலமாக பொறியியல் படிக்கும் மாணவர்கள் செமஸ்டர் கட்டணத்தை வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செமஸ்டர் கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். மேலும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் கடந்த ஜூலை 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அண்ணா பல்கலை, தொலைதூர படிப்பு பயிலும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தொலைதூர கல்வி பயிலும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுக்கான கட்டணத்தை வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் தொலைதூர கல்வியில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் நடப்பு செமஸ்டருக்கான கல்விக் கட்டணம் ரூ.12,500-ஐ வரும் 18-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் 18 ஆம் தேதிக்குள் செலுத்தாதவர்கள் ரூ.200 அபாரதத்துடன் ரூ.12700 யை 25 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் அப்போதும் செமஸ்டர் கட்டணம் செலுத்தாமல் இருந்தால் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அபராத தொகையுடன் சேர்த்து ரூ.13,200 கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. தொலைதூர கல்வி மூலமாக பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ரூ.9500 தொகையை செலுத்தினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்விக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews