ஐ.டி.ஐ.,ல் மாணவர் சேர்க்கை - செப்.,15 வரை விண்ணப்பிக்கலாம்
அரசு தொழிற்பயிற்சி மையங்களில், செப்., 15 வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.,) உட்பட, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 2021-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, செப்., 15 வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.குறைந்தபட்ச கல்வித்தகுதி 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச வயது வரம்பு ஆண்களுக்கு, 14 முதல் 40 வயது வரை அனுமதி உண்டு; பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
தகுதி வாய்ந்த, மாணவ, மாணவியர் சேர்ந்து கொள்ளலாம்.கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, இலவச லேப்டாப், சைக்கிள், சீருடை, காலணி, பாடப்புத்தகங்கள், மாதம்தோறும், 750 ரூபாய் பயிற்சி உதவித்தொகை, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் உள்ளன.நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை உடுமலை அரசு தொழிற்பயிற்சி மையத்தில், ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட உதவி இயக்குனர் 0421-2230500; 9080276172 ஆகிய எண்களிலும், உடுமலை அரசு ஐ.டி.ஐ., முதல்வரை, 94990 55700 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Search This Blog
Saturday, August 21, 2021
Comments:0
ஐ.டி.ஐ.,ல் மாணவர் சேர்க்கை - செப்.,15 வரை விண்ணப்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.