தமிழக குடும்பத் தலைவிகள் கவனத்திற்கு – ரூ.1000 உதவித்தொகை குறித்து அமைச்சர் விளக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 04, 2021

Comments:0

தமிழக குடும்பத் தலைவிகள் கவனத்திற்கு – ரூ.1000 உதவித்தொகை குறித்து அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 வழங்குவதற்கு ரேஷன் அட்டையில் பெயர், புகைப்படம் மாற்றுவது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். இது குறித்து முதல்வர் ஆலோசித்து முடிவெடுப்பார். அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை: திமுக ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரேஷன் கடைகள் மூலம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் பல வாக்குறுதிகளை தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அளித்தார் முக ஸ்டாலின். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை நிறைவேற்றி திட்டமாக செயல்படுத்தி வருகிறார். அதில் ஆவின் பால் விலை குறைப்பு, மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் போன்ற திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் ரூபாய் 4000 இரு தவணைகளாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் இன்னும் தரப்படவில்லை. இது குறித்து மக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடமும், அரசிடமும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மறுபுறம் மாதந்தோரும் குடும்பத் தலைவிகள் அரசின் உதவித்தொகை பெற வேண்டுமென்றால் ரேஷன் கார்டில் புகைப்படம் மற்றும் பெயர்களை மாற்ற வேண்டும் என்ற வதந்தி பரவி வருகிறது. இதனால் மக்கள் கொரோனா நெருக்கடி காலத்தில் தொற்று பரவலை கண்டுகொள்ளாமல் உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இந்த நிலையில் ரேஷன் அட்டையில் பெயர், புகைப்படம் மாற்றுவது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என உணவுப் பொருட்கள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து முதல்வர் ஆலோசித்து முடிவு எடுப்பார். அதன் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெளிவாக விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews