நாடு முழுவதும் இண்டேன் நிறுவனம் புதிய வகை கேஸ் சிலிண்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் சிலிண்டர்களை காட்டிலும் இவை ஸ்மார்ட்டான சிலிண்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிலிண்டர்கள்:
நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய தேவையாக சமையல் எரிவாயு உள்ளது. இந்நிலையில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஸ்மார்ட் சிலிண்டர்களை இண்டேன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த புதிய வகை சிலிண்டர்களுக்கு ‘Indane Composite Cylinder’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் சிலிண்டர்களை காட்டிலும் இவை ஸ்மார்ட்டான சிலிண்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலிண்டர்களில் சிறப்பம்சமாக சிலிண்டர் பயன்படுத்துவோரால் எவ்வளவு கேஸ் செலவாகியிருக்கிறது என்பதையும் எவ்வளவு கேஸ் மீதமிருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும். இதனால் சிலிண்டர் காலியாகும் சமயம் சரியாக கணித்து புதிய சிலிண்டர் வாங்க முடியும். ஏற்கனவே மக்கள் பயன்படுத்தி வரும் சிலிண்டர்களை விட இந்த சிலிண்டர்களில் அதிக பயன் இருக்கும்.
அதாவது பழைய சிலிண்டர்களை விட இந்த சிலிண்டர்கள் எடை குறைவாக இருக்கும். மீதமுள்ள கேஸ் அளவை தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த சிலிண்டர் துரு பிடிக்காது, தரையில் எந்தவித கறையும் ஏற்படாது. இந்த சிலிண்டர்கள் முதலில் 5 கிலோ, 10 கிலோ எடைகளுடன் டெல்லி, குருகிராம், ஹைதராபாத், ஃபரிதாபாத், லூதியானா ஆகிய பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் நாடு முழுவதும் இந்த சிலிண்டர் கிடைக்கும் என இண்டேன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.