கிருஷ்ணகிரி மாவட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் :
கோவிட் -19 பெருந்தொற்று காரணத்தினால் அனைத்து அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2021-22 - ம் கல்வி ஆண்டில் ஜூன் மற்றும் ஜூலை இரு மாதங்களாக கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் நேரடி வகுப்பு நடைபெறாத நிலையில் கல்வி தொலைக்காட்சி வழியாகவும் , இணையவழி மற்றும் இதர சமூக வலைதளங்கள் வழியாகவும் கற்றல் கற்பித்தல் செயலப்பாடுகள் மாவட்ட அளவில் செம்மையாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே குறுவளமைய அளவில் அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை குறு வள மைய அளவில் ( CRC Level ) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டு வருகிறது.
இக்கூட்டத்தில் கொரானா பெருந்தொற்று காலக்கட்டத்தில் இணையவழி சமூக வலைதளம் , கல்வி தொலைக்காட்சி , Home visit போன்றவை பயன்படுத்தி கற்றல் கற்பித்தலில் சிறப்பாக செயல்பட்டு மாணவர்களின் கற்றல் விளைவுகள் அடைந்ததை உறுதி செய்து , பங்கு பெற்ற மாணவர்களின் ஈடுபாடு அதிகமாக உள்ள பள்ளிகளை தேர்வு செய்து மாவட்டத் திட்ட அலுவலகத்திற்கு ஒவ்வொரு குறு வள மையத்திலிருந்தும் சிறந்த பள்ளிகளின் செயல்பாட்டு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . இவ்வலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட சிறப்பாக செயல்படும் பள்ளிகளில் புதுமையாக கையாளப்பட்ட TNTP , DIKSHA , Teachmint App , Zoom App , Whattsapp , Google Meet , MS Teams , Youtube மற்றும் இதர கல்வி சார்பான Apps மூலமாக LIVE Class செயல்படுத்தி வருவதை அறிய முடிகிறது.
இப்பள்ளிகளை போல மற்ற பள்ளிகளும் கற்றல் , கற்பித்தல் , சிறப்பாக செயல்படும் பள்ளிகளை பின்பற்றி கல்வி தரத்தை மேம்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும் பாடவாரியாக பாடத்திட்டங்கள் எளிமையாக்கப்பட்டு உரிய கால இடைவெளிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
இவ்வகையான கற்றல் கற்பித்தலை வலுப்படுத்த , சென்ற ஆண்டு குறுவளமைய அளவில் Learning outcomes சார்ந்த Worksheet அனைத்து வகுப்புகளுக்கும் தயார் செய்யப்பட்டுள்ளது. இக்கல்வி ஆண்டின் ஜூன் / ஜூலை மாதங்களில் அந்தந்த பள்ளிகளில் முடிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு பாடத்திட்டத்தின்படி , Content Based Learning Outcomes அடைந்ததை உறுதி செய்யும் வகையில் மாணவர்களுக்கு Worksheets / Book Back Exercises , ஒப்படைவு வழங்குதல் மற்றும் சிறுத்தேர்வுகள் நடத்தப்பட்டு , மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பீட்டு பட்டியலை தயார் செய்து தலைமை ஆசிரியர் பார்வைக்கு வாரந்தோறும் உட்படுத்தி பள்ளிக்கு வரும் ஆய்வு அலுவலர்களுக்கு முன்னிலைப்படுத்த வேண்டும்.
மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட பெற்றோர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி , மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு எவ்வித இடையூறுகள் ஏற்படா வண்ணம் மாணவர்களையும் , பெற்றோர்களையும் ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் பாடக் குறிப்பேட்டில் , பாடத்திட்டம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தந்த வாரத்திற்கான வகுப்புகளின் பாடப் பொருள் சார்ந்த பாடக்குறிப்புகள் எழுதப்பட்டிருப்பதையும் , என Whattsapp குழுவில் மாணவர்களுக்கு வழங்கும் செயல்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும் கவனித்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் தலைமை ஆசிரியர் பார்வைக்கு உட்படுத்த வேண்டும். அனைத்து வகுப்புகளின் Workdone பதிவேட்டிலும் கால அட்டவணை பின்பற்றி அம்மாத்திற்கான பாடப்பொருள் உரிய ஆசிரியரால் உரிய நேரத்தில் நடத்தப்பட்டுள்ளதை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தலைமை ஆசிரியர்கள் சரி பார்த்து , மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள Assignments எத்தனை மாணணவர்களால் முடிக்கப்பட்டுள்ளது.
Assessment ல் மாணவர்களின் அடைவுநிலை ஒவ்வொரு மாணவருக்கும் பதிவேட்டில் பதியப்பட்டு தலைமை ஆசிரியர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்
Search This Blog
Thursday, July 29, 2021
Comments:0
Home
EDUCATION
PROCEEDINGS
பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் , கற்பித்தல் - கற்றல் விளைவுகள் - மேம்படுத்துதல் - சார்பாக CEO அவர்களின் செயல்முறைகள்!
பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் , கற்பித்தல் - கற்றல் விளைவுகள் - மேம்படுத்துதல் - சார்பாக CEO அவர்களின் செயல்முறைகள்!
Tags
# EDUCATION
# PROCEEDINGS
DEO பதவி உயர்வு வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்த தலைமையாசிரியருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு - Director Proceedings
மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு முன் தேதியிட்டு பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு
Moral Education To Tamilnadu School Students - Proceedings Download Here
Labels:
EDUCATION,
PROCEEDINGS
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84631176
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.