CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியீடு – கல்வி வாரியம்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் இந்த மாதத்தில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்வு முடிவுகள்:
சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி நடப்பு ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மாற்று மதிப்பீடு முறையில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. பொதுத்தேர்வு நடத்தப்படாமல் CBSE தேர்வு முடிவுகள் வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 12ம் வகுப்பு இடைப்பருவ தேர்வுகளில் எடுத்துள்ள மதிப்பெண்கள் 40% அளவிற்கும், 11ம் வகுப்பு வகுப்பு இறுதி மதிப்பெண்களின் அடிப்படையில் 30% மதிப்பெண்களும், 10ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 30% மதிப்பெண்களும் வழங்கப்பட உள்ளது.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு 100 மதிப்பெண்களில் 20 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டின் அடிப்படையிலும், 40 மதிப்பெண்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் இருந்து, 30 மதிப்பெண்கள் இடைப்பருவ தேர்வுகளில் இருந்து, 10 மதிப்பெண்கள் பள்ளிகளில் அவ்வப்போது நடந்த தேர்வுகளில் இருந்து கணக்கிடப்பட இருக்கிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன் பின்னர் மாணவர்களின் உயர் கல்விக்கான சேர்க்கை தொடங்கப்படும். வாரியம் அளிக்கும் மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் மீண்டும் நடத்தப்படும் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என்றும், முக்கிய பாடங்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி போதுமான அளவு மதிப்பெண் பெறாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.