பொறியியல் மாணவர்களுக்கான JEE Main நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் நீட் தேர்வை அக்டோபர் வரை ஒத்திவைக்க அரசுக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளது.
நீட் தேர்வு:
அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு நடத்தப்படுமா என்பது குறித்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக JEE Main நுழைவுத்தேர்வுகளின் மூன்றாவது மற்றும் நான்காவது அமர்வுகளுக்கான தேதிகளை, தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டிருந்தது. இதை தொடர்ந்து நீட் தேர்வு குறித்த அறிவிப்புகளுக்காக மாணவர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி பல மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
முன்னதாக ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், வழக்கமாக தேர்வு நடைபெறும் 60 நாட்களுக்கு முன்னர் தொடங்கும் சில பதிவு செயல்முறைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் ஒத்தி வைக்கப்படுவதற்கான வாய்ப்பாக கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக செப்டம்பர் 5 முதல் நீட் தேர்வுகள் துவங்கும் என்ற போலியான அறிவிப்புகள் சமூக ஊடகங்களில் வலம் வந்தது. இந்த அறிவிப்புகள் உண்மை இல்லை என NTA தெளிவுபடுத்தியது. ஆனால் இதுவரை நீட் தேர்வுக்கான தேதிகளை தேர்வு முகமை அறிவிக்கவில்லை. தவிர மருத்துவ நுழைவுத்தேர்வை நடத்துவதற்கு பொருத்தமான தேதியை முடிவு செய்ய இன்னும் ஆலோசித்து வருவதாக NTA தெரிவித்துள்ளது. மறுபுறத்தில் நீட் தேர்வை அக்டோபர் மாதம் வரை ஒத்திவைக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் பல கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த கோரிக்கைகள் அடங்கிய ட்விட்டர் பதிவை முன் வைத்து, நீட் நுழைவுத்தேர்வை அக்டோபர் வரை ஒத்திவைக்குமாறு மருத்துவ ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.