வருமான வரி தாக்கல் செய்ய ஆசிரியர்களுக்கு சிக்கல்; பொறுப்பை தட்டிக்கழித்த பி.இ.ஓ.,க்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 09, 2021

Comments:0

வருமான வரி தாக்கல் செய்ய ஆசிரியர்களுக்கு சிக்கல்; பொறுப்பை தட்டிக்கழித்த பி.இ.ஓ.,க்கள்

மதுரையில் வட்டார கல்வி அலுவலர்கள் (பி.இ.ஓ.,க்கள்) சார்பில் உரிய படிவங்கள் வழங்காததால் அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் வருமான வரி தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நிதியாண்டு முடிவுற்ற பின் ஆசிரியர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான படிவம் 16 பிரிவு 'ஏ' மற்றும் 'பி' படிவங்களை பி.இ.ஓ.,க்கள் (டிராயிங் ஆபீசர்) வழங்க வேண்டும். படிவத்தில் தவறு இருப்பின் அதை திருத்தி மே 31க்குள் வழங்குவது வழக்கம்.இந்தாண்டு கொரோனா தொற்றால் ஒரு மாத காலஅவகாசம் அளிக்கப்பட்டும் ஜூன் 30 வரை பி.இ.ஓ.,க்களால் ஒரு ஆசிரியருக்கு கூட படிவம் வழங்கப்படவில்லை. இதனால் இந்தாண்டு வரி தாக்கல் (ரிட்டன்ஸ்) செய்வதில் தாமதம் ஏற்பட்டால் தேவையின்றி அபராதம் செலுத்தும் நிலைக்கு ஆசிரியர் தள்ளப்பட்டுள்ளனர். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசகன் கூறியதாவது: மாவட்டத்தில் 15 பி.இ.ஓ.,க்களின் கீழ் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். வழக்கமாக மே 31க்குள் இப்படிவங்கள் வழங்கப்படும். இந்தாண்டு ஜூலை 9 ஆகியும் வழங்கப்படவில்லை. பி.இ.ஓ.,க்கள் தாமதம் செய்வது குறித்து சி.இ.ஓ., சுவாமிநாதனிடம் மனு அளித்துள்ளோம், என்றார்.

படிவத்திற்கு 'பணமா'

பி.இ.ஓ.,க்கள் அலுவலகத்தில் இப்படிவங்களை பெற ஆசிரியர்களிடம் ரூ.200 வரை வசூலிக்கப்படுவது எழுதப்படாத நடைமுறையாக உள்ளது. இதற்கும் முற்றுப்புள்ளி வைக்க சி.இ.ஓ., நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் விரும்புகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews