உயர் கல்வி துறையின்கீழ் செயல்படும் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் கல்வி தரத்தை உயர்த்த, நடவடிக்கை எடுக்குமாறு, துணை வேந்தர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழக உயர் கல்வி துறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பிரச்னைகள் உள்ளன. சர்ச்சை
பல்கலைகள், கல்லுாரிகள் போன்றவற்றில், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முதல், அலுவலக பணியாளர்கள் வரையிலான நியமனத்தில், பல்வேறு விதிமீறல் புகார்கள் எழுந்தன.உயர் கல்வி மன்றத்தில் முறையான உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளப்பட வில்லை. மத்திய அரசின் மானியங்களை பெறுவதில், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. கவுரவ விரிவுரையாளர் நியமனங்களிலும் சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், உயர் கல்வி துறையின் செயலராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.அமைச்சர் பொன்முடியின் தலைமையில், பல்கலை துணை வேந்தர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. பல்கலைகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. எதிர்பார்ப்பு
முறைகேடான நியமனங்களை பட்டியல் எடுக்க உத்தரவிடப்பட்டது. கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முடிவுகளை, படிப்படியாக அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, 'துணை வேந்தர்களும், கல்லுாரி முதல்வர்களும் பணி நியமனங்களில், எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடக்கூடாது; உயர் கல்வி நிறுவனங்களின் ஒப்பந்தங்களை, யு.ஜி.சி.,யின் விதிகளை பின்பற்றி வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும்' என, துணை வேந்தர்களுக்கு, உயர் கல்வி துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் உத்தர விட்டுள்ளார்.
பல்கலைகளின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க, எந்த நேரத்திலும் துணை வேந்தர்கள் தன்னை சந்தித்து பேசலாம் என்றும், உயர் கல்வி துறை செயலர் தெரிவித்து உள்ளார். உயர் கல்வி துறையில், 10 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு, கல்லுாரி கல்வி தரம் உயர்வுக்கு வரும் என, பேராசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.