இணையவழி கல்வி வழங்கும் நிறுவனங்களுக்கான அங்கீகாரம் நீட்டிப்பு – யூஜிசி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 09, 2021

Comments:0

இணையவழி கல்வி வழங்கும் நிறுவனங்களுக்கான அங்கீகாரம் நீட்டிப்பு – யூஜிசி அறிவிப்பு

இணையவழி கல்வி வழங்கும் நிறுவனங்களுக்கான அங்கீகாரம் நீட்டிப்பு – யூஜிசி அறிவிப்பு
இணையவழி கல்வி வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் அடுத்த 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக யூஜிசி அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலின் காரணமாக கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவதில் சில திருத்தங்களை யூஜிசி அறிவித்துள்ளது. யூஜிசி அமைப்பு


இந்தியாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம், செயல்முறைகள் ஆகியவற்றை யூஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானிய குழு வழங்குகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா பரவலின் எதிரொலியாக கல்லூரிகள் மூடப்பட்டன. கல்லூரிகள் திறப்பு குறித்து கூடிய விரைவில் முடிவு எடுக்க இருப்பதாக யூஜிசி அமைப்பு அறிவித்துள்ளது. இப்படியாக சூழல் இருப்பதால், பலரும் இணையவழி கல்வியையே நாடுகின்றனர்.

இணையவழி கல்வியை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் குறித்த திருத்தப்பட்ட அறிக்கை ஒன்றினை யூஜிசி அமைப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டு இருந்தது. அதில் இணையவழி கல்வியினை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்கள் தேசிய நிறுவன தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இருக்க வேண்டும் என்றும், நாக் என்னும் மதிப்பீட்டில் 3.2 சதவீதம் பெற்று இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. மேலும், உயர்கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை ஆண்டுதோறும் தங்களது அங்கீகாரத்தினை புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தற்போது யூஜிசி அமைப்பு இது குறித்த ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளது. அதாவது இணையவழி கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அதாவது 2024 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை 2020 – 2021 ஆம் கல்வி ஆண்டில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, கொரோனா பாதிப்பின் காரணமாக கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெறுவதில் திருத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews