தமிழக அரசு சார்பில் வேலையில்லாத இளைஞர்கள் / மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதந்தோறும் அதிகபட்சம் ரூ.1000 வரை வழங்கப்படும் நிலையில், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உதவித்தொகை விண்ணப்பங்கள்:
தமிழகத்தில் அரசு பணிகளை பெறுவதற்கு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப தொகைகளும் மாறுபடும். தற்போது மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய துணை இயக்குநர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற ஆகஸ்ட் 31ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். இதில் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ரூ.300, தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 என பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்புகளும் உண்டு. விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரி படிப்பினை தமிழ்நாட்டிலேயே முடித்திருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வயது, வருமான வரம்பு என எதுவுமின்றி ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியுள்ள நபர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து உரிய ஆவணங்களை ஒப்படைத்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாளாகும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.