தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் கணினி பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 28, 2021

Comments:0

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் கணினி பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் கணினி பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை சார்பாக சிறப்பு பயிற்சி பெரம்பலூர் மாவட்டத்தில் 3ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு 6 பள்ளிகளில் ஆன்-லைன் பயிற்சி அளிக்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2வது ஆண்டாக பள்ளிகளைத் திறப்பதில் சிரமங்கள் உள்ளதால், கடந்தஆண்டு கல்வி பயின்ற, முதல் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள, அனைத்து பள்ளி மாணவ,மாணவியரும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. பள்ளிகள் திறக்கப்படாததற்கு மாற்றாக ஆன்லைன் மூலமும், கல்வித் தொலைக்காட்சி வழியாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் ஆன்லைன் மூலமாக பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து செயல்பாடுகளும் “ஹைடெக் லேப்” எனப்படு ம் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் வழியாக மேற்கொள்ளப்பட உள்ளது. இதனை யொட்டி தலைமைஆசிரியர் முதல் அனைத்துவகை ஆசிரியர்கள் வரை அனைவருக்கும் கணினியை இயக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுவதால், தமிழகத்திலுள்ள அனைத்துவகை ஆசிரியர்களுக்கும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக சிறப்பு பயிற்சி அளிக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.இதையொட்டி தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது 10 முதல் 15 பள்ளிகள் கொண் ட தனித்தனி மண்டலங்கள் பிரிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆகஸ்டு முதல் வாரத்தில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

முதல்கட்டமாக மண்டல அளவிலான ஒருங்கிணைப்பா ளர்களுக்கு 26ம்தேதி ஆன் லைன் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த ஆன்லைன் பயிற்சியை சென்னையில் இருந்தபடி தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசினார். பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து வகைகளை சேர்ந்த 322 அரசுப்பள்ளிகள், 35 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், 1பழங்குடியினர் பள்ளி என மொத்தம் 358 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சிறுவாச்சூர், கவுல்பாளையம், வேப்பூர், வேப்பந்தட்டை, வெங்கலம், லெப்பைக்குடிகாடு (ஆண் கள்) ஆகிய 6 அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தலா ஒருவருக்கு என 6 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு நேற்று முன் தினம் ஆன்லைன் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் சிறுவாச்சூர் அரசுமேல்நிலைப் பள்ளியிலுள்ள உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதா என்பவருக்கு அளிக்கப்பட்ட ஆன்லைன் பயிற்சியை பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் நேரில் பார்வையிட்டார். அப்போது பள்ளித்தலைமைஆசிரியர் கோடி உடனிருந்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews