Breaking

Tuesday, July 27, 2021

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?

பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்?

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளா கத்தில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு தேவையான கரோனா தடுப்பூசி கள் மத்திய அரசிடமிருந்து தொடர்ந்து கேட்டுப் பெறப்படுகின்றன. தமிழகத்தில் இதுவரை 2.08 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தற்போது 11.36 லட்சம் தடுப்பூசிகள் கையிருப் பில் உள்ளன.

கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் பொது மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமாக வந்து தடுப்பூசியைபோட்டுச்செல்கின்றனர். தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தேவையான அளவு உள்ளது. கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் ஆக்சிஜன் தேவையும் குறைந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக சுற்றுச் சூழல் துறை தான் முடிவெடுக்க வேண்டும். தமிழகத்தில் பள்ளி, கல் லூரிகள் திறக்கப்படுவது என்பது கொள்கை முடிவு சார்ந்த விஷயம் என்பதால், முதல்வர் முடிவு செய்து அறிவிப்பார் என்றார் அவர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog