இன்ஜி., கவுன்சிலிங் பதிவு ஆரம்பம் 2 லட்சம் இடங்களுக்கு சேர்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 27, 2021

Comments:0

இன்ஜி., கவுன்சிலிங் பதிவு ஆரம்பம் 2 லட்சம் இடங்களுக்கு சேர்க்கை

இன்ஜினியரிங் படிப்பில் உள்ள இரண்டு லட்சம் இடங்களை கவுன்சிலிங் வாயிலாக நிரப்புவதற்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. 54 இடங்களில், மாணவர்களுக்கான உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கு, தமிழக அரசின் சார்பில், ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், செப்டம்பர் 7ல் துவங்குகிறது.மாநிலம் முழுதும், 500க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கவுன்சிலிங் வழியே மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த கவுன்சிலிங்குக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது. அறிவுறுத்தல் :

உயர்கல்வி துறையின், www.tneaonline.org என்ற இணையதளத்தில், மாணவர்கள் தங்களின் விபரங்களை பதிவு செய்யலாம்.விண்ணப்ப பதிவுக்கு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பதிவு எண், ஜாதி சான்றிதழ், ஆதார் எண், மொபைல் போன் எண், பெற்றோரின் ஆண்டு வருமானம், பள்ளியில், 6ம் வகுப்பு முதல் படித்த விபரங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநிலம் முழுதும் 54 இடங்களில் மாணவர்களுக்கான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை மற்றும் விண்ணப்ப பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு, 044- - 2235 1014, 044- - 2235 1015 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், care@tneaonline.org என்ற, 'இ- - மெயில்' முகவரி யிலும் தொடர்பு கொள்ளலாம் என, தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.'கட் ஆப்' இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவுக்கான இணைய தளத்தில், கல்லுாரிகளின் காலியிட பட்டியல், கவுன்சிலிங் குறியீட்டு எண், முந்தைய ஆண்டின் 'கட் ஆப்' மதிப்பெண் உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றுள்ளன. கவுன்சிலிங் தேதி, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் நாள் உள்ளிட்ட கால அட்டவணையும் பதிவேற்றப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews