முதல் தலைமுறை தொழில்முனைவோர் மானிய கடன் உதவியுடன் தொழில் தொடங்க அழைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 17, 2021

Comments:0

முதல் தலைமுறை தொழில்முனைவோர் மானிய கடன் உதவியுடன் தொழில் தொடங்க அழைப்பு

ற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை தொழிலுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை திட்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானத்துக்கு உச்சவரம்பு இல்லை. இத்திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்பயிற்சி தேர்ச்சி பெற்ற 21 முதல் 35 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும். விண்ணப்பதாரர் முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் வங்கிக்கடன் பெறும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். மேலும், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதிக்கான சான்றிதழ், ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிடச் சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தற்போது, இத்திட்டத்துக்கு 30.09.2021 வரை மாவட்ட அளவிலான நேர்காணல் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியில் இருந்தும் விலக்கு அளித்து ஆணை வழங்கியுள்ளது. பதிவேற்றப்பட்ட விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு தொடர்புடைய வங்கி கிளைகளுக்கு, தகுதியின் அடிப்படையில் பரிந்துரை செய்யப்படும். மேலும், விவரங்களுக்கு சேலம் 5 ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை 0427 - 2448505, 2447878 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews