நமது ஆதார் விவரங்களை மற்றவர்கள் முறைகேடாக பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் இரண்டு எளிய வழிமுறைகள் வீட்டில் இருந்தே மேற்கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
பயோமெட்ரிக் விவரங்கள்:
இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) சமீபத்தில் அதிகாரபூர்வ டிவீட்டர் தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒருவர் விஐடி எண்ணை அசல் 12 இலக்க ஆதார் எண்ணுக்கு பதிலாக பயன்படுத்தலாம் என்று அறிவித்தது. இந்த முறை ‘மாஸ்க் ஆதார்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த முறை அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் மற்றும் பல தனிப்பட்ட அடையாள ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு நபரின் கைரேகைகள், புகைப்பட அடையாளம் மற்றும் கருவிழி விவரங்களை உள்ளடக்கிய மக்கள்தொகை விவரங்களை தவிர, பயோமெட்ரிக் விவரங்களையும் ஆதார் கொண்டுள்ளது. இதனால் ஆதார் எண்ணை முறையாக பாதுகாக்க வேண்டியம் அவசியம் உள்ளது. தவறாக மோசடிக்காரர்களின் கைகளில் நமது ஆதார் விவரங்கள் சேர்க்கப்பட்டு விடக்கூடாது. UIDAI வலைத்தளம் வழியாக ஆதார் பயோமெட்ரிக் லாக் செய்யும் முறை:
முதலில் uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
‘எனது ஆதார்’ பிரிவின் கீழ், ‘ஆதார் சேவைகள்’ என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
அதில், ‘ பயோமெட்ரிக்ஸ் லாக் / OPEN’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அங்கு 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு, ஆதார் அட்டையில் உள்ளது படி, உங்களின் முழு பெயர் மற்றும் பின்கோடு விவரங்களை பதிவிட வேண்டும்.
இப்பொழுது, செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு முறை கடவுச்சொல்லைப் பெற உதவும் ‘அனுப்பு OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
OTP வந்ததும், உங்களுக்கு விருப்பமான கடவுச்சொல்லுடன் அதை உள்ளிட வேண்டும்.
‘பயோமெட்ரிக் பூட்டுதலை இயக்கு’ என்பதற்கு அருகிலுள்ள செக் பாக்ஸைக் கிளிக் செய்து, மீண்டும் ‘இயக்கு’ பொத்தானை அழுத்தவும். இது உங்கள் ஆதார் அட்டை பயோமெட்ரிக்ஸை லாக் செய்யும். மொபைல் எஸ்எம்எஸ் மூலம் ஆதார் பயோமெட்ரிக்ஸை லாக் செய்யும் முறை:
பயனர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐ பெறுவதற்கு 1947 க்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் GETOTP ஆகவும் ஆதார் எண்ணின் கடைசி நான்கு அல்லது எட்டு இலக்கங்களாகவும் எழுதப்பட வேண்டும் – எடுத்துக்காட்டாக, GETOTPXXXX அல்லது GETOTPXXXXXXX என்று அனுப்ப வேண்டும்
இந்த செய்தியை அனுப்பியதும், UIDAI தனிநபருக்கு 6 இலக்க OTP ஐ எஸ்எம்எஸ் வழியாக அனுப்பும்.
OTP ஐப் பெற்ற பிறகு, பயனர் OTP ஐப் பயன்படுத்தி மற்றொரு செய்தியை அனுப்ப வேண்டும். ஆதார் எண்ணின் கடைசி நான்கு அல்லது எட்டு இலக்கங்களுடன் செய்தியை LOCKUID என எழுத வேண்டும். எடுத்துக்காட்டாக, LOCKUIDXXXXOTP அல்லது LOCKUIDXXXXXXXOTP என்று அனுப்ப வேண்டும்.
ஆதார் பயோமெட்ரிக்ஸ் பூட்டப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு பயனரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உறுதிப்படுத்தல் செய்தி வழங்கப்படும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.