திண்டுக்கல் அரசினர் (மகளிர்) தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தகவல். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 07, 2021

Comments:0

திண்டுக்கல் அரசினர் (மகளிர்) தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தகவல்.

திண்டுக்கல் அரசினர் (மகளிர்) தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவோர் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ச.விசாகன் தகவல்.

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்), கீழ்க்கண்ட சேர்க்கை நடைபெற மகளிர்க்கான தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் உள்ளது. ஐ.டி.ஐ-ல் சேர விரும்புவோர், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் 28.07.2021 வரை விண்ணப்பிக்கலாம். கம்மியர் கருவிகள்(Instrument Mechanic) 2 ஆண்டுகள் படிப்பு, தகவல் தொடர்பு பராமரிப்பு (Information communication தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் & Technology & System Maintenance) 2 ஆண்டுகள் படிப்பு, கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (Computer Operator and Programming Assistant) ஒரு ஆண்டு படிப்பு, டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்பரேட்டர் (Desktop Publishing Operator) ஓராண்டு படிப்பு, நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் (Fashion Design & Technology) ஓராண்டு படிப்பு ஆகிய தொழிற்பிரிவில் சேர 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தையல் வேலை தொழில்நுட்பம்(Sewing Technology) ஓராண்டு படிப்பு, அலங்கார பூத்தையல் தொழில்நுட்பம் (Surface Ornamentation Technique (Embroidery) ஓராண்டு படிப்பு ஆகிய தொழிற்பிரிவில் சேர 8 அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட படிப்புகளுக்கு NCVT சான்றிதழ் வழங்கப்படும். திறன் மின்னனுவியல் தொழில்நுட்ப பணியாளர் (Technician Power Electronics System) 2 ஆண்டுகள் தொழிற்பிரிவில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு SCVT சான்றிதழ் வழங்கப்படும்

மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750/ தொழிற்பயிற்சியில் சேருவோருக்கு, மாதந்தோறும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிகணினி, விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி ஆண்டு தோறும், விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா காலணிகள், மொழித்திறன் மற்றும் கணினி பயிற்சி, விலையில்லா வரைப்படக்கருவிகள், அட்டை ஆகியவை வழங்கப்படும். இலவச விடுதி வசதி விலையில்லா அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும். உண்டு. பஸ் பாஸ் வசதி உண்டு. மகளிருக்கு உச்சகட்ட வயது வரம்பு இல்லை. மேலும், விபரங்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), முதல்வரை நேரிலோ அல்லது 0451 - 2470504 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews