உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு முக்கிய பொறுப்பு... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 08, 2021

Comments:0

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு முக்கிய பொறுப்பு... முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி..

தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திற்கு புதிய தலைவராக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும், துணை தலைவராக பேராசிரியர் அ.ராமசாமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில அளவிலான உயர்கல்வித் திட்டங்களின் மேம்பாட்டிற்கும் மற்றும் மாநிலத் திட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டங்கள் போன்றவற்றை ஒருங்கிணைக்கவும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம், தோற்றுவிக்கப்பட்டது. தற்போது பல்வேறு கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டப் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களை தலைப்பு வாரியாக ஆய்வு செய்து, இணைக் கல்வி குழுவின் (Equivalence Committee) முன்பு சமர்ப்பித்து, அதன் தீர்மானங்களை இம்மன்றம் ஆற்றி வருகிறது. கடந்த அரசுக்கு அனுப்பும் பணியையும் 2016 ஆம் ஆண்டிலிருந்து இம்மன்றத்தின் துணைத்தலைவர் பதவி நிரப்பப்படாமலும், உயர்கல்விமன்றம் திருத்தியமைக்கப்படாமலும் இருப்பதை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றத்தைத் திருத்தியமைத்து உத்தரவிட்டுள்ளார்கள். திருத்தியமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் தலைவராக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும், துணைத் தலைவராக பேராசிரியர் ராமசாமியும், உறுப்பினர் - செயலராக பேராசிரியர் சு.கிருஷ்ணசாமி, பணிவழி உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், பல்கலைக் கழக மானியக் குழு செயலாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆகியோர் அங்கம் வகிப்பார்கள். துணைத் தலைவராக தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் பேராசிரியர் அ.இராமசாமி. அவர்கள் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றியவர் ஆவார். இவர் அறிஞர் அண்ணா விருது, இராஜா சர்.அண்ணாமலை செட்டியார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர் ஆவார். மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, கடந்த 2006ஆம் ஆண்டில் பேராசிரியர் ராமசாமியை இதே பதவியில் அமரவைத்து அழகு பார்த்தது குறிப்பிடத்தக்கது. இப்பதவியில் 14.8.2006 முதல் 9.12.2011 வரை பேராசிரியர் ராமசாமி அரும்பணியாற்றியிருக்கிறார். அதே போன்று, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் கிருஷ்ணசாமியும், 33 ஆண்டுகள் பச்சையப்பன் கல்லூரியில் இணைப் பேராசிரியராக வரலாற்றுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஆலோசனைக்குழு, இவர், தேசிய ஐக்கிய நாடுகள் வளர்ச்சிக் திட்டக்குழு, உலக சுற்றுச்சூழல் ஆய்வுக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் உறுப்பினராகப் பொறுப்பு வகித்ததோடு, தமிழ் நாடு அரசின் “நல்லாசிரியர் விருது' உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர் ஆவார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews