தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த ஆய்வுப்பணிகள் 90% முடிவு – சிறப்பு குழு தகவல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 08, 2021

Comments:0

தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த ஆய்வுப்பணிகள் 90% முடிவு – சிறப்பு குழு தகவல்!

தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வுகளை எதிர் கொள்வதற்கான ஆய்வுக்கூறுகளை கண்டறிய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இப்பணிகளில் 90% முடிந்துள்ளதாக ஆய்வுக்குழு தகவல் அளித்துள்ளது. நீட் ஆய்வுப்பணி

இந்திய அளவில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் இத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவப்படிப்புகளுக்கான இந்த நுழைவுத்தேர்வுகளை 12 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவர்களால் எதிர்கொள்ள முடியாத சூழல் நிலவுவதால், நீட் பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் பல எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.

மேலும் நீட் தேர்வுகளை ரத்து செய்வதற்கான பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ளதான அரசு, நீட் தேர்வினால் உண்டாகும் பாதிப்புகளை கண்டறியும் படி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான 8 உயரதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை நியமித்தது. இதற்கிடையில் நீட் தேர்வுக்கான சிறப்பு குழு பொது மக்களின் கருத்துக்களையும் பெற்றது. இந்நிலையில் நீதிபதி ராஜன் தலைமையிலான நீட் சிறப்பு குழுவின் 4 ஆவது ஆலோசனைக் கூட்டமானது, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவத்துறை சிறப்பு செயலாளர் செந்தில்குமார், பள்ளிக் கல்வித்துறை செயலர் காகர்லா உஷா, சட்டத்துறை செயலாளர் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிறப்பு குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.ராஜன், நீட் நுழைவுத்தேர்வு குறித்ததான ஆய்வுப்பணிகள் 90% முடிவடைந்ததாகவும், தற்போது 12 ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களுக்கு இத்தேர்வினால் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். தவிர ஆய்வுப்பணிகள் பெருமளவு முடிவு பெற்றிருப்பதால், இவற்றை மேற்கொள்ள கால அவகாசத்தை நீட்டித்து கேட்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews